பேராவூரணி : ரூ.1.27 கோடி மதிப்பிலான பள்ளிக் கட்டடங்கள் திறப்பு
பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களில், புதிதாக கட்டப்பட்ட ரூ.1.27 கோடி மதிப்பிலான பள்ளிக் கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களில், ரூ.1.27 கோடி மதிப்பிலான பள்ளிக் கட்டடங்கள் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்ததை தொடர்ந்து, சேதுபாவாசத்திரம் ஒன்றியம், ரெண்டாம்புளிக்காடு ஊராட்சி, தண்டாமரைக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.29.47 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை கட்டடத்தை, சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் முன்னிலையில், பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
இதேபோல், பேராவூரணி ஊராட்சி ஒன்றியம், காலகம் ஊராட்சி, கொன்றைக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கூடுதல் இரண்டு வகுப்பறை கட்டடம், ஒட்டங்காடு ஊராட்சி, பெரிய தெற்குக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், கூடுதல் இரண்டு வகுப்பறை கட்டடம், புனல்வாசல் ஊராட்சி (வாடிக்காடு) ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலா ரூபாய் 30.60 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளதையும், சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் திறந்து வைத்து, குத்து விளக்கேற்றினார். நிகழ்ச்சியில், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் அலிவலம் அ.மூர்த்தி, பேராவூரணி வடக்கு திமுக ஒன்றியச் செயலாளர் இளங்கோ, பேராவூரணி ஒன்றியக் குழு துணை தலைவர் ஆல்பர்ட் குணாநிதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சடையப்பன் (சேதுபாவாசத்திரம்), தவமணி, பொய்யாமொழி (பேராவூரணி), மாவட்டக் கல்வி அலுவலர் கு.திராவிடச் செல்வம், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மீனா சுந்தரி (சேதுபாவாசத்திரம்), கலா ராணி (பேராவூரணி), ஊராட்சி மன்றத் தலைவர்கள் செந்தில்குமார் (காலகம்), வளர்மதி நாகராஜன் (ரெண்டாம்புளிக்காடு), ராஜாக்கண்ணு (ஒட்டங்காடு), சிவசம்பாள் ராமராஜ் (புனல்வாசல்), ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உமா மதிவாணன், ராஜலெட்சுமி ராஜ்குமார், பாக்கியம் முத்துவேல், தலைமை ஆசிரியர்கள் சந்திரன் (தண்டாமரைக்காடு), தேன்மொழி (கொன்றைக்காடு), வீரம்மாள் (பெரிய தெற்குக்காடு), சந்திரசேகர் (வாடிக்காடு) மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் எஸ்.கே.ராமமூர்த்தி, ரவீந்திரன், பள்ளி மேலாண்மைக்குழு, கிராம கல்வி வளர்ச்சிக்குழு, கிராம பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.