பேராவூரணி : ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி 

Update: 2023-12-04 01:16 GMT
பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்கள் 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணிவட்டார வள மையத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.  1 முதல் 3  ஆம் வகுப்புகள் வரை கையாளும் ஆசிரியர்களுக்கான பயிற்சி பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. 4,5 வகுப்பெடுக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சி பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப்பயிற்சியில் 175 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். எண்ணும் எழுத்தும் ஐயங்களும், தெளிவுகளும் என்ற தலைப்பில் நடைபெற்ற பயிற்சியில், ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும், கற்றல் கற்பித்தல் முறையில் உள்ள இடர்பாடுகள் பயிற்சியாளர்களால் தெளிவுபடுத்தப்பட்டது.  பயிற்சியை தலைமை ஆசிரியர்கள் தனலட்சுமி, மாரிமுத்து ஆகியோர் துவக்கி வைத்தனர். மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கு. திராவிடச் செல்வம்,  வட்டார கல்வி அலுவலர்கள்  அங்கயற்கண்ணி,  கலாராணி,  வட்டார வளமைய மேற்பார்வையாளர் முருகேசன் ஆகியோர் பார்வையிட்டு,  பயிற்சியின் நோக்கம் பற்றிக் கூறினர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் சரவணன் செய்திருந்தார்.
Tags:    

Similar News