பெரியார் நினைவுநாள் பொது கூட்டம்

ஓமலூரில் திராவிட கழகம் சார்பில் பெரியாரின் 50ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது;

Update: 2023-12-29 06:40 GMT

பெரியார் நினைவுநாள் பொது கூட்டம்

சேலம் மாவட்டம் , ஓமலூர் பஸ் நிலையத்தில் தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் மற்றும் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் ஓமலூர் ஒன்றிய திராவிட கழக தலைவர் சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. மேட்டூர் திராவிடர் கழக செயலாளர் கலைவாணன் வரவேற்பு உரையாற்றிய இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழகம் தலைமை கழக அமைப்பாளர் பாலு, மாவட்ட திராவிடர் கழக தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் திராவிட கழக காப்பாளர் சுப்பிரமணியன் தொடக்க உரை ஆற்றினார்.

Advertisement

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக திராவிட கழக தலைமை கழக பேச்சாளர் அன்பழகன் மற்றும் திராவிட கழக காப்பாளர் புள்ளையண்ணன் ஆகியோர் திராவிடர் கழக கொள்கை கோட்பாடுகள் குறித்தும், மத்திய பாஜக அரசு குறித்து விமர்சனம் செய்தும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே சிறப்புரையாற்றினர். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கென்னடி நன்றி உரையாற்றிய இந்த நிகழ்ச்சியில் காடையாம்பட்டி திராவிட கழக தலைவர் ஜெயபால், மேச்சேரி வட்டார தலைவர் ராஜேந்திரன், மேட்டூர் நகர தலைவர் கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News