பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் வழக்கு: போலீசார் விசாரணை

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான வழக்கு தொடர்பாக 5 பேரிடம் கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

Update: 2024-01-05 09:11 GMT

காவல் நிலையம்

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்ட சிலர் சட்ட விரோதமாக நிறுவனம் தொடங்கியதாக துணைவேந்தர் ஜெகநாதன் உட்பட சிலர் மீது கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல், பல்கலைக்கழக டீன் ஜெயராமன், துணைவேந்தரின் செயலர் சுப்பிரமணிய பாரதி, பல்கலைக்கழக கண்காணிப்பாளர் விஸ்வநாதமூர்த்தி, அவரது மனைவி வனிதா உள்ளிட்ட 8 பேர் கருப்பூர் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என சூரமங்கலம் துணை கமிஷனர் நிலவழகன் ஏற்கனவே சம்மன் அனுப்பினார்.

இந்த சம்மன் அடிப்படையில் ஜெயராமன், சுப்பிரமணிய பாரதி, விஸ்வநாத மூர்த்தி மற்றும் வனிதா உள்ளிட்ட 5பேர் கருப்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகினர். இதையடுத்து சூரமங்கலம் துணை கமிஷனர் நிலவழகன் அவர்களிடம் விளக்கம் கேட்ட நிலையில் அவர் அனைவரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News