68 இடங்களில் பட்டாசு கடை வைக்க அனுமதி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் செயல்பட அனுமதி கேட்டு வியாபாரிகள் அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர்.

Update: 2023-11-09 14:03 GMT

கோப்பு படம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகள் செயல்பட அனுமதி கேட்டு வியாபாரிகள் அந்தந்த மாவட்ட நிர்வாகத்திடம் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். இதனை தீயணைப்புத்துறை ஆய்வு செய்து அனுமதி சான்றிதழ் வழங்கி வருகின்றனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக்கடை அமைக்க கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஆன்லைனில் ஏராளமானோர் விண்ணப்பம் செய்திருந்தனர்.

இதனை ஆய்வு செய்ய தீயணைப்புத் துறையினருக்கு மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உத்தர விட்டனர். அதன்படி தீயணைப்புத் துறையினர் சம்மந்தப்பட்ட இடங்களில் ஆய்வு செய்தனர். போதுமான இடவசதி, பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்டவை குறித்து பார்வையிட்ட அவர்கள் அறிக்கையை மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பித்தனர். அதன்படி 68 இடங்க ளில் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைத்து விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

Tags:    

Similar News