பட்டியலின மக்களை அவதூறாக பேசிய நபர்: எஸ்.பி அலுவலகத்தில் புகார்

திருப்பத்தூரில் பட்டியலின மக்களை கோவிலை விட்டு வெளியே போங்கடா அநாகரிக பேச்சில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-03-15 10:18 GMT

மனு அளிக்க வந்தவர்கள் 

திருப்பத்தூர் மாவட்டம் ஆலகாயம் அடுத்த பெத்தூர் பகுதி பட்டியலின வகுப்பை சேர்ந்த மணி மகன் கிருஷ்ணமூர்த்தி மற்றும் 10க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பட்டியலின மக்களை குறிவைத்து சாதிய வன்கொடுமை செய்யும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர்.

அந்த புகாரில் ஆலங்காயம் பகுதியில் நூறு வருடம் பழமையான மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவருடைய நண்பர்கள் கோவிலில் வழிபாட்டை முடித்துக் கொண்டு அமர்ந்து கொண்டிருந்தனர் அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் திடீரென்று இந்தக் கோயிலுக்கு வந்து சாமி கும்பிட உங்களுக்கு என்ன தகுதி இருக்கு ஒழுங்கா மரியாதையா எழுந்து வெளியே போங்கடா என்று அநாகரிகமாக பேசினார்.

இதுகுறித்து ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது போலீசாரின் விசாரணையில் போலீசார் முன்னிலையிலேயே வெங்கடேசன் மரியாதை இல்லாமல் கேஸ் போடுறியா போட்டுக்கோ என ஆணவ பேச்சில் ஈடுபட்டார் எனவே வெங்கடேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags:    

Similar News