நகை திருட்டில் ஈடுபட்டவர் கைது
காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் முருகா நகரை சேர்ந்த பாபு வயது 60 இவர் ரேஷன் கடையில் சேல்ஸ்மேனாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். பாபு தன் மனைவியை அழைத்து கொண்டு சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பினார். அப்பொழுது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பீரோவின் கதவு உடைத்து இரண்டு கிலோ வெள்ளி 2 பவுன் நகை 5 ஆயிரம் பணம் திருடுபோனது .இது குறித்து பாபுவின் மனைவி குமாரி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று சின்னசேலம் போலீசார் அண்ணாநகரில் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.விசாரணையில் அகரகோட்டாலம் குளத்து மேட்டு தெருவை சேர்ந்த பழனிச்சாமி மகன் அஜித்குமார் வயது 22 என்பதும் முருகா நகரில் உள்ள ரேஷன் கடை ஊழியரின் வீட்டில் திருடியதும் தெரிய வந்தது. பின்னர் அவரிடம் இருந்து உருக்கப்பட்ட 12 கிராம் தங்கம், உருக்கப்பட்ட 102 கிராம் வெள்ளி கைப்பற்றப்பட்டது.இதனைத் தொடர்ந்து அஜித்குமாரை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடலூர் சிறைச்சாலையில் அடைத்தனர்.இவர் ஏற்கனவே கள்ளக்குறிச்சி, கச்சிராயபாளையம் பகுதியில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.