முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அவதூறு வீடியோ பதிவிட்டவர் கைது

மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கருணாநிதி குறித்து அவதூறு வீடியோ பதிவிட்ட திருக்காட்டு பள்ளியை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2024-01-20 01:01 GMT
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அவதூறு வீடியோ பதிவிட்டவர் கைது

பைல் படம்

  • whatsapp icon

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி பற்றி கவிஞர் வைரமுத்துவின் குரல் போல் தவறாக சித்தரித்து பேசுவது போன்ற வீடியோ டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.   இது தொடர்பாக திமுக மாநில இளைஞரணி துணை செயலாளர் இளையராஜா என்பவர் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார் .

இதனை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சர்ச்சைக்குரிய பதிவினை பதிவிட்டவர் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டு பள்ளி தெற்கு வாடிய காடையைச் சேர்ந்த செந்தில்நாதன் என்பதும் தந்தை பெயர் கோவிந்தராஜன் என்பதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News