கீழ்வேளூரில் பெருமாள் திருக்கல்யாண நிகழ்ச்சி

நாகை மாவட்டம் கீழ்வேளூர் யாதவ நாராயணப் பெருமாள் கோவிலில் பெருமாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது;

Update: 2024-06-01 02:23 GMT

நாகை மாவட்டம் கீழ்வேளூர் யாதவ நாராயணப் பெருமாள் கோவிலில் பெருமாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது


நாகை மாவட்டம்     கீழ்வேளூர் யாதவ நாராயணப் பெருமாள் கோவிலில் நடைபெற்ற பெருமாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அமைந்துள்ள யாதவவல்லி  தாயார் உடனுறை யாதவ நாராயணப்பெருமாள் கோவிலில் பெருமாள் திருக்கல்யாண நிகழ்ச்சி கடஸ்தாபணம், கலசபூஜையுடன் தெநதொடங்கியது. திருக்கல்யாணத்தை  முன்னிட்டு அட்சயலிங்க சுவாமி கோவிலில் இருந்து‌ பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர்.

Advertisement

இதையடுத்து யாதவ நாராயணப்பெருமாள், யாதவவல்லி தாயார் மண்டபத்தில் மலர் அலங்காரத்தில் எழுந்தருளினர். இதையொட்டி சிறப்பு ஹோமங்கள், நடைபெற்றது.  மாப்பிளை அழைப்பு, பெண்  அழைப்ப்பு நடைபெற்றது. அதனை தொடர்ந்து   யாதவ நாராயணப்பெருமாள்   யாதவவல்லி  தாயார் திருக்கல்யாணம்  நடைபெற்றது அதனை தொடர்ந்து  மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி  தரிசனம் செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை.  கோவில் நிர்வாகிகள், உபயதாரர்கள் கிராம மக்கள் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News