காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நூதன முறையில் மனு

வாகனப் கட்டுப்பாட்டை இழந்தால் விபத்து! காதலர்களை கட்டுப்பாட்டை இழந்தால் ஆபத்து! இதுபோன்று மத்திய அரசு காதலர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கோரி என நூதன முறையில் உடல் முழுவதும் காதலர் தின விழிப்புணர்வு பதாகைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் மனு அளித்தார்.

Update: 2024-02-13 04:04 GMT

சரவணன் 

 உலக காதலர் தினம் பிப்ரவரி 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் காதலர்கள் இடையே உரிய சமூக இடைவெளியுடன் காதலர் தினத்தை கொண்டாட வலியுறுத்தியும் பிப்ரவரி 14-ஆம் தேதியை கலாச்சார பாதுகாப்பு தினமாக மத்திய மாநில அரசுகள் அறிவிக்க கோரியும் மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சரவணன் என்பவர்  மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்திற்கு வருகை தந்து உடல் முழுவதிலும் காதலிக்கும் காலத்தில் காதலர்கள் விலகி இருப்பது தன்மானம்! இணைந்து இருப்பது காதலுக்கு அவமானம்! வாகனப் கட்டுப்பாட்டை இழந்தால் விபத்து! காதலர்களை கட்டுப்பாட்டை இழந்தால் ஆபத்து என்ற காதலர்தின விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஒட்டி சுமந்தபடி வந்து நூதன முறையில் மனு அளித்தார் .

இது குறித்து பேசிய சரவணன் சமூக இடைவெளி குறித்து கொரோனா காலகட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது , விபத்தை தடுக்க போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது இதேபோன்ற கலாச்சாரத்தை பாதுகாக்க காதலர் தினத்தன்று காதலர்களுக்கிடையே சமூக இடைவெளியை வலியுறுத்தி மத்திய அரசு காதலர்களுக்கான உரிய விழிப்புணர்வுகளை வழங்க வேண்டும் எனவும், பிப்ரவரி 14-ஆம் தேதி கலாச்சார பாதுகாப்பு தினமாக மத்திய மாநில அரசியல் அறிவிக்க வேண்டும் என கூறினார்.

Tags:    

Similar News