திருப்பூர் ஆட்சியரகத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர் சங்கத்தினர் மனு
திருப்பூரில் அரசு கேபிள் விநியோக அலுவலர் கல்பனா கணவருடன் இணைந்து மாமுல் கேட்டு மிரட்டுவதாகவும் மாமுல் தராவிட்டால் இணைப்புகளை துண்டித்து விடுவதாக மிரட்டும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கேபிள் ஆபரேட்டர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூரில் அரசு கேபிள் விநியோக அலுவலர் கல்பனா கணவருடன் இணைந்து மாமூல் கேட்டு மிரட்டுவதாகவும், மாமூல் தராவிட்டால் இணைப்புகளை துண்டித்து விடுவதாக மிரட்டும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கேபிள் ஆபரேட்டர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திரூப்பூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்க தலைவர் வீரமுத்து, செயலாளர் பிரகாஷ் ஆகியோர் தலைமையில் ஆபரேட்டர்கள் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில்,’ திருப்பூர் அரசு கேபிள் விநியோக அலுவலராக இருக்கும் கல்பனா என்பவர் நியமனத்துக்கு பிறகு ஆபரேட்டர்களுக்கு தரமான சிக்னல் அளிக்கப்படுவதில்லை, அவரது கணவர் சூர்யா உடன் சேர்ந்து கொண்டு, ஒரு சில ஆபரேட்டர்களுக்கு மட்டும் சில லட்சம் பெற்றுக் கொண்டு சிக்னல் கொடுக்கிறார்.
பணம் தரமுடியாத ஆபரேட்டர்கள் உள்ள பகுதியில் வேறு நபர்களுக்கு சிக்னல் கொடுப்பேன் என மிரட்டுவதால் அப்பாவி ஆபரேட்டர்கள் அவருக்கு பயந்து பணம் கொடுக்கும் நிலை உள்ளது. சில ஆபரேட்டர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கல்பனாவின் கணவர் சூர்யா மிரட்டல் விடுக்கிறார். கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு ஓ.எப்.சி., மூலம் தான் சிக்னல் வழங்க வேண்டும் என ஒப்பந்தத்தில் உள்ளநிலையில், சூர்யா தனியார் இடத்தில் இருந்து சிக்னல் வழங்கி தனியாருக்கு கட்டுப்பட்டு செய்யல்படுவதால் ஆபரேட்டர்கள் இந்த தொழிலில் ஈடுபட முன்வரவில்லை.
கல்பனா விநியோகஸ்தராக பொறுப்பேற்றதில் இருந்து, எந்தவித அதிகாரமும் இல்லாத போதும், அவரது கணவர் சூர்யா அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் தலையிட்டு அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.