சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

திருப்பூரில் தேர்தல் பயன்பாட்டிற்கு வாடகை வாகனங்களை இயக்க கோரி தென்னிந்திய சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Update: 2024-03-18 10:08 GMT

ஆட்சியரிடம் மனு

தேர்தல் பயன்பாட்டிற்கு வாடகை வாகனங்களை இயக்கக்கோரி தென்னிந்திய சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மக்களவைத் தேர்தலின் போது தேர்தல் பணிக்காக அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் பயன்பாட்டிற்காக வாடகை வாகணம் பயன்படுத்துவது வழக்கமாக இருப்பதாகவும் , ஆனால் தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் மூலமாக தனிநபர் பயன்பாட்டுக்கு வாங்கிய வாகனங்களை பயன்படுத்துவதற்கு தேர்தல் ஆணையம் முயற்சி மேற்கொண்டு வருவதோடு சில வாகனங்களை ஒப்பந்த அடிப்படையில் எடுத்துக் கொண்டிருப்பதாகவும் , இதன் காரணமாக வாடகை வாகன ஓட்டுபவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் , தங்கள் முறையாக அனைத்து வரிகளும் கட்டி பயன்படுத்தி வரக்கூடிய நிலையில் தேர்தல் நேரத்தில் வழக்கமாக வாடகை வாகனங்கள் இயக்கப்படும் பட்சத்தில் தங்கள் வாழ்வாதாரம் மேம்படக்கூடிய சூழலில் தற்போது அரசு வழக்கமான நடைமுறையை கைவிட்டு தனிநபர் வாகனங்களை பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்வது தங்கள் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாகி இருப்பதால் , பழைய நடைமுறையை பின்பற்றி வாடகை வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தென்னிந்திய சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர் நலச் சங்கத்தினர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

Tags:    

Similar News