தார் பிளான்ட் தொழிற்சாலை கழிவுகளை தடுக்க கோரி கிராம மக்கள் மனு

பெரம்பலூர் அருகே தார் பிளான்ட் தொழிற்சாலை கழிவுகளை தடுக்க வேண்டும் என கிராம மக்கள் ஆட்சியரகத்தில் மனு கொடுத்தனர்.

Update: 2024-01-12 14:48 GMT

மனு அளித்த கிராம மக்கள்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் , நாரணமங்கலம் அருகே உள்ள கல்லுமலை பகுதியைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் தலைமையில், மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

அதனை தொடர்ந்து அவர்கள் தெரிவிக்கையில் தங்கள் கிராம பகுதியில் உள்ள மருதை ரோடு செல்லும் வழியில் பி சி வி என்ற தார் பிளாண்ட் தொழிற்சாலை இயங்கி வருகிறது அவ்வப்போது இயங்கி வந்த இந்த தொழிற்சாலை, தற்போது தொடர்ந்து இயங்கி வருகிறது.

இதனால் நச்சு வகை வாயு மற்றும் புகை வெளியேறுவதால் அப்பகுதியில் குடியிருக்கும் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு உடல் அரிப்பு மற்றும் மூச்சு திணறல் மேலும் குடிநீர், உணவுகளை பாதுகாத்து, சாப்பிட முடியாத சூழ்நிலை இருந்து வருவதாலும், சிறுவர், குழந்தைகளுக்கு அதிகப்படியான பாதிப்பு ஏற்படுவதாலும்,

தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சுவாயு புகையை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் கல்லுமலை பகுதியில் உள்ள ஏரியில் அதிகப்படியான குப்பை கழிவுகளும், எம் சாண்ட் கழிவுகளும் கலந்து வருவதாலும், அங்கு உள்ள குடிநீரை பயன்படுத்த முடியாமல், குடிநீர் . மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இவற்றை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த மனு வழங்கும் நிகழ்ச்சியின் போது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சக்திவேல் மற்றும் மாவட்ட தலைவர் சரவணன்,

இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News