மலைவாழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை வலியுறுத்தி கோரிக்கை மனு

மலைவாழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கும் இயக்கம்

Update: 2023-12-14 15:19 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கொல்லிமலையில் வாச்சாத்தியில் பழங்குடியின மக்களுக்கு எதிராக நடைபெற்ற வன்கொடுமைக்கு எதிராக 31 ஆண்டு காலம் சட்ட போராட்டம் நடத்தி குற்றவாளிகள் 269 பேருக்கும் தண்டனை பெற்றுத் தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவருமான தோழர் சண்முகம் அவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் கொல்லிமலை மக்களின் அடிப்படை பிரச்சினைகளை முன்வைத்து மனு கொடுக்கும் இயக்கம் கொல்லிமலை செம்மேடு வழுவில் ஓரி அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னனூர் நாடு செயலாளர் தோழர் எஸ்.கே.மாணிக்கம் தலைமை வகித்தார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.தங்கராசு வரவேற்றார். நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்து கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.ரங்கசாமி, ஏ.டி.கண்ணன் மாவட்ட குழு உறுப்பினர் கே சின்னசாமி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் தொலைபேசி சண்முகத்தை பாராட்டி கௌரவித்தனா். மூத்த தலைவர்கள் வி.கே.வெள்ளைச்சாமி, எஸ்.கே.ஆண்டி, கே.வி.ராஜ், எஸ்.சி.சிவனேசன், எஸ்.பாரதி, ஈ.பன்னீர்செல்வம், சி.சின்னப்பையன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் முன்னிலை வகித்தனர். தேவனூர் நாடு கிளைச் செயலாளர் சி ரேவதி நன்றி கூறினார். இதில் 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் கொல்லிமலை வட்டாட்சியர் அவர்களிடம் கொல்லிமலையில் மிகப்பெரிய பிரச்சினையாக திகழ்ந்து வரக்கூடிய ரீ சர்வே குளறுபடிகளை சரி செய்ய வலியுறுத்தியும், பழங்குடியின நல வாரியத்தை முறையாக அமல்படுத்த வேண்டும், பழங்குடியினர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை முறையாக நடத்த வேண்டும், குடிமனை பட்டா வழங்க வேண்டும், கொல்லிமலையில் உள்ள 14 நாடுகளிலும் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் முறையாக தங்களது அலுவலகம் மற்றும் தங்களது குடியிருப்புகளில் தங்கி பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது .

Tags:    

Similar News