பட்டாவை ரத்து செய்யக்கோரி மனு
திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் பட்டாவை ரத்து செய்யவில்லை என்றால் தற்கொலை செய்யப் போவதாக நிலக்கோட்டையை சேர்ந்த தம்பதி மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Update: 2024-05-20 12:09 GMT
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தானமாக கொடுத்த இடத்தை மகன் விற்பனை செய்துள்ளார். இதனால், அந்த பட்டாவை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தும் இதுவரை பட்டாவை ரத்து செய்யாததால் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியுரிமை ஆவணங்களை ஒப்படைத்து விட்டு, தற்கொலை செய்யப் போவதாக நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மகாமுனி மற்றும் அவரது மனைவி மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.