இலவச பட்டா வழங்கக்கோரி மனு

போடிநாயக்கனூர் வைகை மகளிர் விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கத்தினர் இலவச பட்டா வழங்கக்கோரி மனு அளித்தனர்

Update: 2023-12-04 17:34 GMT

போடிநாயக்கனூர் வைகை மகளிர் விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கத்தினர் இலவச பட்டா வழங்கக்கோரி மனு அளித்தனர்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போடிநாயக்கனூர் வைகை மகளிர் விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் சார்பாக சங்கத்தின் தலைவர் செல்வி செயலாளர் லதா பொருளாதார ஈஸ்வரி ஆகியோர் தலைமையில் இருபதுக்கு மேற்பட்டவர்கள் கோரிக்கை மனுவை வழங்கினார்கள் இந்த மனுவில் தங்கள் சங்கத்தில் உள்ள நபர்கள் அனைவரும் விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக உள்ளனர் என்றும் ,மேலும் அனைவரும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்றும் கடந்த 2015 ஆம் ஆண்டு அன்றைய தமிழ்நாடு அரசு சார்பில் சொக்கநாதபுரம் கிராமப் பகுதியில் 52 நபர்களுக்கு பட்ட வழங்க பரிந்துரை செய்தும் இதுவரை வழங்கவில்லை. மேலும் அந்த பகுதியானது நீர் நிலை பகுதியாக உள்ளது. எனவே தற்பொழுது அணைக்கரைப்பட்டி கிராமப் பகுதியில் உள்ள பட்டா எண் 35 /16 இல் பூமி தான நிலங்கள் உள்ளன. அந்த இடத்தில் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என கோரி மனு அளித்தனர்.
Tags:    

Similar News