மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண கோரிக்கை மனு

நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு மக்களுடன் முதல்வர் முகாமில் வழங்கப்பட்டது

Update: 2023-12-20 17:37 GMT

நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு மக்களுடன் முதல்வர் முகாமில் வழங்கப்பட்டது

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஒன்றியம் ஆலாம்பாளையம் பேரூராட்சி சார்பில், தனியார் மண்டபத்தில் புதன் அன்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சார்பில், ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியே மக்கள் பிரச்சனைகள் சார்ந்த கோரிக்கை மனு வழங்கப்பட்டது. இதில் ஆலாம்பாளையம் பேரூராட்சி காவேரி ஆர்.எஸ் கரட்டாங்காட்டில் உள்ள மேல்நிலைத் தொட்டி பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அதை இடித்து விட்டு புதிதாக குடிநீர் தொட்டி அமைத்து தர வேண்டும் ! காவேரி ஆர்எஸ் பேருந்து நிறுத்தம் முதல் விருமாண்டி டீக்கடை வரை உள்ள தெருவிளக்கு, காவேரி ஆர்எஸ் பேருந்து நிறுத்தம் முதல் எஸ்பிபி கரட்டான் காடு கேட் வரை உள்ள நுழைவுப் பாலம் பகுதியில், முறையாக தெருவிளக்குகள் எரியாததால் அவ்வழியே செல்ல பெண்கள் அச்சமடைகின்றனர். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்! ஆலம்பாளையம் பேரூராட்சி 11-ஆம் வார்டு வஊசி நகர் பகுதியில் கோவில் நிலத்தில் குப்பை மலை போல் குவிந்து துர்நாற்றம் வீசுவதால், கொசு உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்தப் பகுதியை தூய்மைப்படுத்தி கொசுக்கள் தேங்காத வண்ணம் கொசு மருந்து அடித்து சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும்! ஆலாம்பாளையம் பேரூராட்சி அன்னை சத்யா நகர் பகுதியில், பழுதடைந்த நிலையில் பேரூராட்சி திருமண மண்டபம் உள்ள நிலையில் அதனை இடித்து விட்டு புதிதாக சமுதாயக்கூடத்தை கட்டி குறைந்த வாடகையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும்! பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆலாம்பாளையம் வழியாக பேருந்துகள் செல்லக்கூடிய பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டு வருவதால் பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ். பகுதியில் இருந்து நாமக்கல் ,திருச்சி போன்ற பகுதிகளுக்கு பேருந்துகள் சென்று வருகிறது. இந்நிலையில் காவேரி ஆர் எஸ் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் முறையாக நிற்காததால் பொதுமக்கள் மற்றும் பயணிகள் அவதிக்குள்ளாகி வருவதால், பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ் பகுதியில் பேருந்துகள் நின்று செல்வதற்கும், பயணிகளை ஏற்றி இறக்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ! மேலும் அதிவேகத்தில் செல்லும் பேருந்துகளால் பொதுமக்கள் அச்சத்திற்கு உள்ளாவதால், பேருந்துகளை மிதமான வேகத்தில் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் உரிய அலுவலரிடம் தனித்தனியே வழங்கப்பட்டது . இந்த நிகழ்வின் பொழுது ஆலாம்பாளையம் பேரூராட்சி தலைவர் சகுந்தலா, ஆலாம்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.அசோகன் மற்றும் சங்க நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.....
Tags:    

Similar News