வெளிநாட்டில் சிக்கித்தவிக்கும் து மகனை மீட்டு தரக்கோரி மனு
வெளிநாட்டில் சிக்கித்தவிக்கும் தனது 23 வயது தனது மகனை மீட்டு தரக்கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனிடம் தம்பதியினர் கோரிக்கை மனுவினை அளித்தனர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி நாரணாபுரம் கிழக்கு பகுதியை சேர்ந்த சந்திரசேகர், மாரீஸவரி தம்பதி மகன் இந்திரகுமார் (23. ) பி.ஏ., எம்.எஸ்.சி., விஷுவல் கம்யூனிகேஷன் முடித்துவிட்டு கணினி தொடர்பான பணிக்கு தாய்லாந்து அடுத்துள்ள லாவோஸ் என்ற நாட்டிற்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சென்றதாக கூறப்படுகிறது. டிக்கெட்டிற்கான பணம் ரூ.50 ஆயிரத்தை வேலைக்கு சேர்ந்தவுடன் தருவதாகவும் கூறியுள்ளனர்.
இதை நம்பி இந்திரகுமார் அங்கு பணிகள் சேர்ந்ததாகவும் அங்கு இரண்டு மாதம் பணிபுரிந்த பின்பு என்ன காரணம் என்று தெரியாமல் அவரை பணியிலிருந்து நிறுத்தி விட்டதாக புறப்படுகிறது இதனால் அங்கு அவர் தனியார் இடத்தில் தங்கியிருப்பதாகவும் அதற்கு ஒரு நாள் வாடகை வசூலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தற்பொழுது இந்தியா திரும்ப முடியாமல் மூன்று நாட்களாக இந்திய தூதரகத்தில் தங்கி இருப்பதாகவும், மகனை மீட்டு இந்தியா கொண்டு வர மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும் எனக் கூறி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனிடம் தம்பதியினர் கோரிக்கை மனுவினை அளித்தனர்