பிள்ளையார்குப்பத்தில் மா.கம்யூ., மனு கொடுக்கும் போராட்டம்
Update: 2023-11-29 06:02 GMT
உளுந்துார்பேட்டை தாலுகா பிள்ளையார்குப்பம். எலவனாசூர்கோட்டை மின்வாரிய அலுவலகங்கள் முன்பு ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடக் கோரி மா.கம்யூ., சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. பின் மின் வாரிய அலுவலர்களிடம் மனுக்களை கொடுத்தனர். பிள்ளையார்குப்பத்தில் நடந்த போராட்டத்திற்கு திருநாவலுார் மேற்கு ஒன்றிய செயலாளர் மோகன், எலவனாசூர்கோட்டையில் நடந்த போராட்டத்திற்கு உளுந்துார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ரகுராமன் தலைமை தாங்கினர்.