கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

நெமிலி கிராமத்தில் பட்டா வழங்கியும் வீடு கட்ட முடியாத சூழ்நிலை உள்ளதால் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Update: 2024-03-14 03:07 GMT

நெமிலி கிராமத்தில் பட்டா வழங்கியும் வீடு கட்ட முடியாத சூழ்நிலை உள்ளதால் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் வளாக கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் நேற்று நடந்தது. இதில், பட்டா கோரிக்கை, ஆக்கிரமிப்பு, வேலைவாய்ப்பு, உதவித்தொகை என பல்வேறு கோரிக்ககைளை வலியுறுத்தி, 540 பேர் மனு அளித்தனர். மனுக்களை பெற்ற கலெக்டர் கலைச்செல்வி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். இக்கூட்டத்தில், தனியார் தொண்டு நிறுவனம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து, 6.56 லட்சம் மதிப்பில், 82 பயனாளிகளுக்கு காதொலி கருவிகளை கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார்.

மகளிர் தினத்தை முன்னிட்டு, ஐந்து பள்ளி குழந்தைகளுக்கும், பல்வேறு துறையில் சிறப்பாக பணியாற்றிய மகளிருக்கு விருதுகளையும் கலெக்டர் கலைச்செல்வி வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். ஸ்ரீபெரும்புதுார் தாலுகா நெமிலி கிராமத்தினர் அளித்த மனு விபரம்: எங்கள் கிராமத்தில், 30க்கும் மேற்பட்டோருக்கு இரு மாதங்களுக்கு முன்பாக, வருவாய் துறை பட்டா வழங்கியது. அந்த இடத்தில் வீடு கட்ட நாங்கள் ஏற்பாடு செய்தோம். ஆனால், அங்கு வீடு கட்ட கூடாது என சிலர் பிரச்னை செய்கின்றனர். வீடு இல்லாமல் சிரமப்பட்டு வரும் எங்களுக்கு, பட்டா வழங்கிய போதும், உரிய இடத்தில் வீடு கட்ட முடியாத நிலை நீடிக்கிறது. எனவே, பட்டா வழங்கிய இடத்தில் பிரச்னை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News