முறையாக குடிநீர் விநியோகிக்க கோரி கிராம மக்கள் மனு
ஆலத்தூர் அருகே உள்ள நாட்டார்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் முறையாக குடிநீர் வழங்க கோரி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.;
Update: 2024-01-30 05:38 GMT
மனு அளிக்க வந்த கிராம மக்கள்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே உள்ள நாட்டார்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜெ.ஜெ. காலணியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஜனவரி 28ஆம் தேதி இன்று காலை ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து மனு கொடுத்தனர். அப்போது அவர்கள் தெரிவித்த போது தங்கள் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இருப்பதாகவும் இங்கு கடந்த ஆறு மாத காலமாக குடிநீர் விநியோகம் சரிவர செய்யப்படாததால், மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாகவும், குடிநீர் இல்லாததால் தங்களது அன்றாட பணிகளை கவனிப்பதில் சிரமம் ஏற்படுவதோடு, பல கிலோமீட்டர் தூரம் சென்று குடிநீர் சேகரித்து வரும் அவலம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், தங்களுக்கு உடனடியாக குடிநீர் இணைப்பு கொடுத்து, குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும் நடவடிக்கை இல்லை என்றால், தங்களது குடும்ப அட்டையை ஆட்சியரிடம் ஒப்படைத்து விடுவதாக தெரிவித்துள்ளனர்.