200 குடும்பங்களுக்கு பட்டா வழங்க பாமக சார்பில் மனு

சங்ககிரி சிறப்பு பட்ட முகாமில் பாமக சார்பில் கோரிக்கை மனு;

Update: 2023-11-26 05:10 GMT

200 குடும்பங்களுக்கு பட்டா வழங்க பாமக சார்பில் மனு அளித்தனா்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினையொட்டி சங்ககிரியில் நடைபெற்ற சிறப்பு பட்டா முகாமில் தேவூர் பாமக, சங்ககிரி, மஞ்சக்கல்பட்டி கிராம ஊர்பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது. பாமக சேலம் தெற்கு மாவட்ட துணைத்தலைவர் டி.எஸ்.லட்சுமணன் சிறப்பு முகாமில் அளித்துள்ள கோரிக்கை மனு அளித்தார்.அதில் சங்ககிரி வட்டம், தேவூர் கிராமம் அம்மன் கோயில் பகுதியில் ஏழை கூலி, நெசவுத்தொழிலாளர்கள் 200 குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். அவர்கள் வீட்டுவரி, குடிநீர், மின் கட்டணங்களை செலுத்தி வருகின்றனர். இது வரை அவர்களுக்கு பட்டா வழங்கவில்லை. அவர்கள் அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியுள்ளார். இதேபோல சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மஞ்சக்கல்பட்டி கிராமத்தில் எடப்பாடி செல்லும் சாலையிலிருந்து பாசிகுட்டை வரை ஊராட்சியின் சார்பில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பகுதியில் சாலை ஆக்கிரமிப்பால் சாலையில் அகலம் குறைவாக உள்ளதையடுத்து வருவாய்த்துறையின் ஆவணங்கள்படி அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்னர் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊர்பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.
Tags:    

Similar News