வருவாய் அலுவலரிடம் பாஜக சார்பில் கோரிக்கை மனு
பெரம்பலூர் வருவாய் அலுவலரிடம் பாஜக விவசாய அணி மாவட்ட தலைவர் கோரிக்கை மனு அளித்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-28 09:12 GMT
மனு அளித்த பாஜகவினர்
பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் பெரம்பலூர மாவட்டத் தலைவர் பெரியசாமி தலைமையில் கட்சியினர் பலர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபுவை நேரில் சந்தித்து, தேங்காய் எண்ணெயை தமிழக அரசு அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி அதற்கான கோரிக்கை மனுவை வழங்கினார்கள்.
இதுகுறித்து தமிழக அரசுக்கு பரிந்துரை செய்வதாக மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார்..