பாதுகாப்பு கேட்டு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் மனு

சமூக விரோத கும்பல்களிடமிருந்து பாதுகாத்திட நடவடிக்கை எடுக்குமாறு, மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் பெரம்பலூர் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-06 05:01 GMT

சமூக விரோத கும்பல்களிடமிருந்து பாதுகாத்திட நடவடிக்கை எடுக்குமாறு, மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் பெரம்பலூர் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரம்பலூர் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில். மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மஞ்சுளா -விடம் மனு கொடுத்தனர். மருத்துவ சேவையை பாதுகாப்பது போல், அரசிற்கு வரி வருவாயை ஈட்டித்தரும் வணிகர்களையும், சமூக விரோத கும்பல்களிடமிருந்து பாதுகாத்திட, தமிழக அரசின் அவசர சட்டம் எண்: 2 / 2008 ல் மருந்து கடைகளையும் மற்றும் அனைத்து வணிகர்களையும் இணைக்கும்படியும் , அல்லது சிறப்பு சட்டம் ஒன்றினை விரைவில் இயற்றிடவும் தமிழக அரசுக்கு தாங்கள் பரிந்துரை செய்யுமாறும், , குற்றம் புரிந்த சமூக விரோத கும்பல்கள் மீது ஈவு இறக்கம் இல்லா முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், வணிகர்களை பாதுகாப்பதன் மூலம் அவர்களை ஊக்கப்படுத்தி உத்வேகத்துடன் வணிகர்கள், வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவிடும்படியும் வேண்டுகிறோம். என குறிப்பிடப்பட்டிருந்த மனுவினை கொடுத்துச் சென்றனர். இந்த மனு வழங்கும் நிகழ்ச்சியின் போது சங்கத்தின் தலைவர் முகமது அலி பொருளாளர் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News