தமிழ் பேரரசு கட்சி சார்பில் மனு
தமிழ்பேரரசு கட்சியின் திருச்சி மண்டல செயலாளர் முடிமன்னன் இன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனுஅளிக்க வந்தார்.
By : King 24X7 News (B)
Update: 2023-10-30 13:42 GMT
தமிழ்பேரரசு கட்சியின் திருச்சி மண்டல செயலாளர் முடிமன்னன் இன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனுஅளிக்க வந்தார். அந்த மனுவில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் செயல்படுத்தபட்டு வரும் புதுவாழ்வு திட்டத்தின் மணப்பத்தூர் ஊராட்சி கணக்கீட்டாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தபட்டு இருந்தது.
மேலும் இவர் இத்திட்டத்தை செயல்படுத்துவதில் பல்வேறு முறைகேடுகளை செய்து வருவதாகவும், மேலும் இத்திட்டத்தில் பயனடைய ஏழை, எளிய மக்களை தேர்ந்தெடுக்காமல், அனைத்து நலத்திட்டங்களும் அவரது உறவினர்களுக்கு சென்று சேரும் வகையில் பணியாற்றுவதாக தெரிவிக்கபட்டு இருந்தது. இதனையடுத்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா சந்தித்து மனு அளிக்கபட்டது. இதில் அக்கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்