மனு கொடுக்கும் போராட்டம்
ஸ்மார் மீட்டர் பொருத்தும் பணியை திரும்ப பெற மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Update: 2023-12-07 01:49 GMT
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் மின்வாரிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை ஸ்மார்ட்மீட்டரை பொருத்த நிர்பந்திக்கும் மத்திய அரசை கண்டித்தும், இத்திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தி நத்தம் மின்வாரிய அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தாலுகா செயலாளர் சின்னக்கருப்பன் தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
இதில் நத்தம் உதவி மின்பொறியாளர் பரசுராமனிடம் மனுக்களை வழங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின், தாலுகா குழு உறுப்பினர்கள் சுமதி, குழந்தைவேல், லெட்சுமணன், சிவா மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.