கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு
கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு
By : King 24x7 Website
Update: 2023-12-21 07:48 GMT
கள்ளக்குறிச்சி ஹச்.எம்.எஸ்., கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் பேரவைத் தலைவர் சுப்ரமணியன் தலைமையில் கலெக்டர் அலுவலத்தில் கொடுத்துள்ள மனு: கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள 17 நலவாரியங்களில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர் உள்ளனர். இவர்களுக்கு பொங்கல் பண்டிகை ஊக்கத்தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும், கட்டுமான தொழிலாளர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தை எளிய முறையில் நடைமுறைப்படுத்தி, வழிகாட்டும் நெறிமுறை திருத்தி அமைக்கவேண்டும். தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு பாலின பாகுபாடின்றி கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.