முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் தேர்தல் அலுவலரிடம் மனு

தேர்தல் விதிமுறைகள் மீறி போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதாக கூறி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வக்கீல்கள் தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளித்தனர்.

Update: 2024-04-12 15:49 GMT

 ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் தேர்தல் வழிகாட்டுதளை மீறி சுயேட்சை சின்னத்தில் போட்டியிடும் ஒ.பன்னீர்செல்வங்கள் பரமக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் சுரொட்டி ஒட்டியதை கண்டித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வழக்கறிஞர்கள் தேர்தல் அலுவலரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பலாப்பழத் சின்னத்தில் போட்டியிடுகிறார் இந்நிலையில் மக்கள் குழம்பம் அடையும் வகையில் ஒ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் சுயட்சை வேட்பாளர்கள் ஐந்து பேர் திராட்சை, வாளி, கரும்பு விவசாயி, பட்டாணி, இரட்டை கிளாஸ் உள்ளிட்ட தனி சின்னங்களில் போட்டியிடுகின்றனர்.

ஒ.பன்னீர் செல்வங்கள் இன்று காலை பரமக்குடி, சத்திரக்குடி, எட்டிவயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் OPS அவர்களுக்கு வாக்களிக்குமாறு திராட்சை, கரும்பு விவசாயி, வாளி சின்னங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது.

இதனை அறிந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழக்கறிஞர் சுவரொட்டியில் அச்சு நிறுவனத்தின் பெயர் இல்லை, சுவரொட்டி அச்சிட்ட தேதி, சுவரொட்டி ஒட்டியதற்கான கணக்கை தேர்தல் அலுவலருடம் ஒப்படைக்கவில்லை தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதை பின்பற்றாமல் தேர்தல் விதிமீறலில் அவர்கள் ஈடுபட்டுள்ளதால் சுவரொட்டி ஒட்டிய ஒபிஸ்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளித்தனர்.

Tags:    

Similar News