கனிமொழி எம்பியிடம் போட்டோ வீடியோகிராபர் அசோசியன் சார்பில் மனு
கனிமொழி எம்பியிடம் போட்டோ வீடியோகிராபர் அசோசியன் சார்பில் புகைப்படக்காரர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து தரக்கோரி மனு அளிக்கப்பட்டது.
By : King 24X7 News (B)
Update: 2024-02-11 14:43 GMT
திமுக சார்பாக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் திருமதி. கனிமொழி எம்பி தலைமையில் பாராளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பொருட்டு இன்று சேலம் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகளிடம் கருத்து கேட்டறிந்தார்.
அவர்களிடம் தமிழ்நாடு வீடியோ போட்டோகிராஃபர் அசோசியன் மற்றும் நாமக்கல் மாவட்ட வீடியோ போட்டோ ஒளிப்பதிவாளர்கள் நலச்சங்கம் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள புகைப்பட வீடியோ கலைஞர்களுக்கு தனி நலவாரியம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட சங்க முன்னாள் நிர்வாகி திருச்செங்கோடு பொன்னுசாமி கோரிக்கை மனுவினை கனிமொழி எம்பி அவர்களிடம் வழங்கினார்கள்.
கோரிக்கை மனுவினை பெற்றுக் கொண்ட கனிமொழி எம்பி அவர் செய்து கொடுப்பதாக தெரிவித்தார்.