வீடியோ ஒளிப்பதிவாளர் நல சங்கம் சார்பில் கனிமொழி எம்பியிடம் மனு

தமிழ்நாடு போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர் நல சங்கம் சார்பில் கனிமொழி எம்பியிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

Update: 2024-02-12 06:44 GMT

எம்பியிடம் மனு அளிப்பு

தமிழ்நாடு போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர் நல சங்கம் சார்பாக திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவிடம் நிர்வாகிகள் கோரிக்கை மனு வழங்கினர். சேலம் தனியார் ஹோட்டலில் திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு நடைபெற்றது

. இதில் எம்பி கனிமொழி, அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நாமக்கல் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என். ராஜேஷ்குமார், அவர்களது முன்னிலையில் நாமக்கல் மாவட்ட போட்டோ வீடியோ ஒளிப்பதிவு நல சங்கம் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள புகைப்பட வீடியோ கலைஞர்களுக்கு தனி நல வாரியம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாமக்கல் மாவட்டத்தின் சங்கத்தின் சார்பாக நிர்வாகிகள் கோரிக்கை மனுவை வழங்கினார்கள் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட கனிமொழி எம்பி இது குறித்து தமிழக முதலமைச்சர் இடம் மற்றும் தேர்தல் அறிக்கையிலும் நிச்சயமாக சமர்ப்பிப்போம் என்று கூறினார்.

மேலும் இதே கோரிக்கை வலியுறுத்தி டாக்டர் எழிலன் ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை உறுப்பினர் அவர்களிடமும் மனு வழங்கினர். . இந்த நிகழ்வில் திருச்செங்கோடு பொன்னுசாமி, மோகனசுந்தரம், பள்ளிபாளையம் சேலம் மாவட்ட தலைவர் ரவி, ராஜா, மேலும் ராசிபுரம் தாலுக்கா உறுப்பினர்களும், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News