கல்லறை தோட்டத்தை மீட்டு தரக்கோரி மனு
கல்லறை தோட்டத்தை மீட்டு தரக்கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-18 16:30 GMT
கல்லறை தோட்டத்தை மீட்டு தரக்கோரி மனு
திண்டுக்கல் மாவட்டம் ஏ.வெள்ளோடு ஊராட்சிக்கு உட்பட்டது சிறுநாயக்கன்பட்டி கிராமம். அங்கு யார் இறந்தாலும் அவர்களை மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கல்லறை தோட்டத்தில் தான் அடக்கம் செய்வார்கள்.
இதனிடையே நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக இடம் பற்றாக்குறை ஏற்பட்டதன் காரணமாக கல்லறை தோட்டத்திற்காகவும், நான்கு வழி சாலை விரிவாக்கத்திற்கு 71 சென்ட் நிலம் வாங்கி இறந்தவர்களின் நல்லடக்கத்திற்காக பயன்படுத்தி வருகின்றோம். இந்நிலையில் ஒரு நபர் தனது நிலம் என சொல்லி போலியான பத்திரம் பதிவு செய்துள்ளார்.
கல்லறை தோட்ட நிலத்தை அபகரிப்பு செய்யும் நபர் மீது நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு தர வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு மன அளித்தனர்.