சேலத்தில் பிரதமர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கப்பட்டது.

Update: 2024-03-22 10:39 GMT
மனு அளித்த காங்கிரசார்

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் செந்தில், மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பாஸ்கர் ஆகியோர் தலைமையில் காங்கிரசார், தேர்தல் நடத்தும் அலுவலர் பிருந்தாதேவியிடம் மனு கொடுத்தனர்.

அநத மனுவில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. சேலத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நரேந்திரமோடி கலந்து கொண்டு பேசினார். அவர் சேலம் வர இந்திய ராணுவ ஹெலிகாப்டரை பயன்படுத்தி உள்ளார். தேர்தல் பிரசாரத்திற்கு ராணுவ ஹெலிகாப்டர் பயன்படுத்தியது சட்டப்படி தவறு.

எனவே பிரதமர் நரேந்திரமோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அப்போது நிர்வாகிகள் சுப்பிரமணியம், தாரை ராஜகணபதி, பழனிசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News