தலைவாசலில் விரைவு ரெயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க மனு

தலைவாசலில் விரைவு ரெயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க மனு

Update: 2024-01-01 12:13 GMT

தலைவாசலில் விரைவு ரெயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க மனு

சேலம் மாவட்டம் தலைவாசல் ரெயில் நிலையம் அருகில் மின்சார ரயில்கள் இயக்குவதற்கு வசதியாக துணை மின்நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு சேலம் கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்கா வந்திருந்தார். அப்போது ஐக்கிய விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் சங்கரய்யா, மாநிலசெயலாளர் வக்கீல் கோவிந்தன் மற்றும் விவசாயிகள் கோரிக்கை மனு கொடுத்தனர். அம்மனுவில், தலைவாசல் வழியாக செல்லும் விரைவு ரெயில்கள் தலைவாசலில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க கோரிக்கை மனு கொடுத்தனர். மேலும் தலைவாசல் ரெயில் நிலையம் முழு நேர ரெயில் நிலையமாக இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராயப்பனூர்- புத்தூர் ரெயில்வே கேட் 118-ல் சுரங்கப்பாதை அமைப்பதற்கு மாற்றாக விவசாயிகள் நலன் கருதி மேம்பாலம் அமைத்து தரவேண்டும். காட்டுக்கோட்டையில் ரெயில்வே கேட் அருகில் சுரங்கப்பாதை அமைக்காமல் மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது .
Tags:    

Similar News