தெரு வியாபாரத் தொழிலாளர் சங்கத்தினர் முதலமைச்சருக்கு மனு

தெரு வியாபாரத் தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வருக்கு மனு.

Update: 2024-02-06 10:11 GMT

கோரிக்கை மனு 

கோவை:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி தெரு வியாபாரத் தொழிலாளர் சங்கத்தினர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் மனு அனுப்பினர்.இது குறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் 2015ஆம் ஆண்டு சாலையோர வியாபாரத்தை முறைப்படுத்துதல் திட்டம் அரசிதழில் வெளியிட்டு அமலுக்கு வந்து விட்ட நிலையில் பெரும்பாலான உள்ளாட்சி நிர்வாகங்களால் முறையாக அதனை அமல்படுத்தப்படவில்லை எனவும் மாவட்டம் முழுவதும் முறையாக அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர். மாநிலம் முழுவதும் தெரு வியாபாரிகள் அனைவருக்கும் வியாபார சான்று,ஸ்மார்ட் கார்டு, அடையாள அட்டைகளை காலக்கெடு நிர்ணயித்து அதற்குள் வழங்க வேண்டும் எனவும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வணிகக் குழு தேர்தல் நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.தெரு வியாபாரிகளிடம் வணிக கட்டணம் வசூலிக்க டெண்டர் விடுவதை கைவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ள அவர்கள் திட்ட விதிகளில் குறிப்பிட்டுள்ள வணிக கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டுவதாகவும் வணிக குழு கூட்டத்தை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூட்ட வேண்டும் எனவும் தெரு வியாபார பொருட்களை இரவில் பாதுகாப்புடன் வைப்பதற்கான இட வசதியை செய்து தர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News