அடிப்படை வசதிகள் கேட்டு கலெக்டரிடம் மனு
Update: 2023-12-18 13:07 GMT
அடிப்படை வசதிகள் கேட்டு கலெக்டரிடம் மனு
அரியலூர் மாவட்டம் ஆனந்தவாடி ஊராட்சிக்குட்பட்ட சோழன்குறிச்சி கிராமமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று மனுஅளிக்க வந்தனர். அந்த மனுவில் எங்கள் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமமக்கள் வசித்து வருவதாகவும், இந்நிலையில் எங்களின் குடிநீர் தேவைக்காக ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கபட்டு உள்ளதாகவும், அதிலிருந்து வழங்கபடும் தண்ணீர் போதுமானதாக இல்லை என்றும், எனவே கூடுதலாக மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தபட்டு இருந்தது. மேலும் வடிகால் வசதி ஏற்படுத்தி ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் வலியுறுத்தபட்டு இருந்தது. இதனையடுத்து அந்த மனுவினை மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணாவை சந்தித்து வழங்கபட்டது. இதில் அக்கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.