தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு
மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை;
Update: 2023-12-06 05:11 GMT
மனு அளிக்க வந்தவர்கள்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே தூதை பகுதியில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த பாதையில் இரண்டு முறை சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனிநபர் ஒருவர் அப்பகுதிக்கு பட்டா உள்ளதாக தெரிவித்து கற்களை ஊன்றி தடை செய்துள்ளார். இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தனி நபர் மீது நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்பை அகற்றி தருமாறு தூதை கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்