சங்கரன்கோவிலில் வாறுகால் அமைக்க கோரி நகராட்சியிடம் கோரிக்கை மனு
100க்கும் மேற்பட்ட் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது;
Update: 2023-12-21 08:07 GMT
மனு அளிக்க வந்த பொதுமக்கள்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சபாபதி நகர் 3ம் தெருவில் அமைந்துள்ள இந்த பகுதிகளில் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி பொதுமக்களுக்கு வாறுகால் மற்றும் கழிப்பிடை வசதி ,குப்பை தொட்டிகள் அமைக்க கோரி நீண்ட நாட்களாக நகராட்சி கவுன்சிலரிடம் கோரிக்கை வைத்தனர், இதனால் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காததால் இன்று 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு நகராட்சி அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கினார் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.