சாலை வசதி கோரி விசிகவினர் துணை மேயரிடம் மனு
Update: 2023-12-12 12:06 GMT
கடலூர் மாநகராட்சியில் இன்று மாநகராட்சி துணை மேயர் பா. தாமரைச்செல்வனிடம் கடலூர் மாநகராட்சி 34 வது வார்டு ஆலைகாலனியை சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் சித்திரைவேல், சாலை வசதி வேண்டி மனு கொடுத்தார். இந்த நிகழ்ச்சியின் போது கடலூர் மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில், கடலூர் நகர செயலாளர்கள் செங்கதிர், ராஜதுரை, மாநிலத் துணைச் செயலாளர்கள் சரண், தமிழரசன், மாவட்ட அமைப்பாளர் சதீஷ், சாசன் சங்கத் தலைவர் பாஸ்கர், நகர பொருளாளர் பிரபாகரன், நகர துணை செயலாளர் பரதன் பழனி உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர். மனுவைப் பெற்றுக் கொண்ட துணை மேயர் உடனடியாக கடலூர் மாநகராட்சி பொறியாளருக்கு இந்த கடிதத்தை பரிந்துரை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.