தவணைக்கு வாங்கிய இடத்தை கிரையம் செய்ய தர வலியுறுத்தி மனு !

திருப்பூரில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் வாங்கிய இடத்தில், கிரயம், அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.;

Update: 2024-04-22 08:51 GMT

திருப்பூரில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் வாங்கிய இடத்தை கிரயம் செய்து அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது மக்கள் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகாவிற்கு உட்பட்ட படியூர் கிராமத்தில் 28 குடும்பத்தினர் 2.4 சென்ட் இடத்தை  வீட்டுடன் கூடிய மனைகளாக வாங்கி வசித்து வருகின்றனர். கடந்த நான்கு வருடங்களாக ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் தவணை தொகை செலுத்தி வரக்கூடிய நிலையில் நான்கு வருடங்களாக எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை.

Advertisement

ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காரணங்களை சொல்லி ஏமாற்றி வருவதாகவும் , ஆனால் இடம் வாங்கும் போது டிடிசிபி அப்ரூவல் , ஆறு மாதத்தில் கிரையம் ,சாலை வசதி,  தண்ணீர் மின்சாரம் எல்லாம் இருப்பதாக பொய் விளம்பரங்களை தந்திருப்பதால் தாங்கள்  ஏமாற்றப்பட்டு இருப்பதாகவும் , இருப்பினும் நான்கு வருடங்களாக முறையாக தவணை தொகை செலுத்தி வரக்கூடிய நிலையில் இன்னும் இடத்தை கிரயம் செய்து தராமல் இருப்பதாகவும் , உடனடியாக இடத்தை கிரயம் செய்து தருவதோடு அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தி தரவேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று கோரிக்கை மனு அளித்தனர்.

Tags:    

Similar News