சட்டவிரோத செங்கல் சூளைகளை அகற்ற மண்டியிட்டு மனு அளித்த பாமகவினர்!

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத இயங்கி வரும் செங்கல் சூளைகளை அகற்ற வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Update: 2024-05-27 12:08 GMT

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத இயங்கி வரும் செங்கல் சூளைகளை அகற்ற வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை மாவட்டத்தில் தடாகம்,கணுவாய், சோமையம்பாளையம்,மேட்டுப்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோத இயங்கி வரும் செங்கல் சூளைகளால் யானைகள் வழித்தடங்கள் பாதிக்கப்படுவதாகவும் நீர்வழிப்பாதைகள் பாதிக்கப்படுவதாக கூறி அவற்றை அகற்ற வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

பாமக கோவை மாவட்ட செயலாளர் ராஜ் தலைமையில் மனு அளிக்க வந்த அக்கட்சியினர் ஒற்றை காலில் மண்டியிட்டு கோரிக்கையை வலியுறுத்தினர்.மேலும் அந்த செங்கல் சூளைகளால் அப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளதை புகைப்படம் எடுத்து வந்தும் யானைகள் நீர்வழிபாதைகளை ஓவியங்களாக வரைந்து வந்தும்,கண்டன பதாகைகளையும் ஏந்தி அவர்களது கோரிக்கையை வலியுறுத்தினர்.

Tags:    

Similar News