மருந்தாளுனர் பற்றாக்குறை - நோயாளிகள் அவதி
மானாமதுரை அரசு மருத்துவமனையில் மருந்தாளுனர் பற்றாக்குறையினால் நோயாளிகள் அவதியுறுகின்றனர்.
Update: 2024-05-19 14:00 GMT
மானாமதுரை அரசு மருத்துவமனையில் மருந்தாளுனர் பணியிடம் காலியாக இருப்பதால் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் மருந்து கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் சுற்று வட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். 50க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இம்மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக மருந்தாளுனர் பணியிடம் காலியாக இருப்பதால் உரிய நேரத்தில் நோயாளிகளுக்கு மருந்து கிடைக்காமல் மிகுந்த அவதிக்குஉள்ளாகி வருகின்றனர். தினந்தோறும் காலை 7:30 மணிக்கு வெளி நோயாளிகள் பிரிவு ஆரம்பிக்கும் நேரத்தில் மருந்தகமும் செயல்பட வேண்டிய நிலையில் தற்போது மாற்றுப் பணியில் வரும் மருந்தாளுனர் காலை 9:00 மணி வரை வராமல் இருப்பதால் மருந்தகத்திற்கு முன் நோயாளிகள் காத்துக்கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.