சேலம் மாவட்டத்தில் 2-ம் கட்ட பயிற்சி

வாக்குச்சாவடி அலுவலர்கள் தபால் வாக்குப்பதிவு செய்தனர்.

Update: 2024-04-08 15:15 GMT

தபால் வாக்கு

சேலம் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக நடந்த பயிற்சி முகாமில் 2,610 வாக்குச்சாவடி அலுவலர்கள் தபால் வாக்குப்பதிவு செய்தனர். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுக்கு நேற்று 11 சட்டசபை தொகுதிகளிலும் 2-ம் கட்ட பயிற்சி முகாம் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டது. சேலத்தில் தனியார் கல்லூரிகளில் நடந்த பயிற்சி முகாமை மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,260 வாக்குச்சாவடி மையங்களில் 13,410 அலுவலர்கள் மற்றும் கூடுதலாக மாற்று அலுவலர்கள் 2,682 பேர் என மொத்தம் 16,092 அலுவலர்கள் பணிபுரிய உள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே கடந்த மாதம் 24-ந் தேதி முதற்கட்ட பயிற்சி நடைபெற்று முடிவடைந்த நிலையில் நேற்று 2-ம் கட்ட பயிற்சி நடைபெற்ற மையங்களில் தபால் வாக்குப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து பயிற்சியில் கலந்து கொண்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள், அவர்களது முகாமில் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்தனர்.
Tags:    

Similar News