வாக்கு எண்ணிக்கை தகவல் பெற தொலைபேசி எண்கள் : ஆட்சியர் தகவல்
வாக்கு எண்ணிக்கை தொடர்பான தகவல்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பெறலாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் 19.04.2024 அன்று பதிவான வாக்குகள் 04.06.2024 அன்று பல்கலைக்கழக வ.உ.சி. பொறியியல் கல்லூரியில் வைத்து எண்ணப்பட உள்ளது. இது தொடர்பாக, இந்தியத் தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் மற்றும் புகார்களை பெறுவதற்காக மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறையினை வாக்கு எண்ணிக்கைக்கு 72 மணி நேரத்திற்கு முன்னதாக செயல்பட அறிவுரை வழங்கியுள்ளது.
அதன்படி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டுவந்த கட்டுப்பாட்டு அறையானது 01.06.2024 முதல் மீண்டும் துவக்கப்பட உள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1800-599-1960 மற்றும் 0461-1950 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு வாக்கு எண்ணிக்கை தொடர்பான தகவல்களை பெறலாம் மற்றும் புகார்களை அளிக்கலாம்.
இந்த கட்டுப்பாட்டு அறையில் போதிய அளவில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து தகவல்களை வழங்குவதற்காகவும் மற்றும் புகார்களை களைவதற்காகவும் உள்ளனர் என தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.