தென்கோடிப்பாக்கத்தில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்

Update: 2023-12-15 06:32 GMT
தென்கோடிப்பாக்கத்தில் அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விழுப்புரம் மாவட்டம் வானூர் ஊராட்சி ஒன்றியம் தென்கோடிப்பாக்கம் ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.

இந்த கண் காட்சியில், தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப் பேற்று முதல் பணியாக 5 முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டு நடைமுறைப்படுத்திய திட்டங்கள், நகர பஸ்களில் பெண்கள் இல வச பயண திட்டம், 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம், உங்கள் தொகுதியில் முதல்-அமைச் சர் திட்டம், மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வித்திட்டம், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம், கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்திட்டம், இருளர், பழங்குடியின மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள், இலங்கை தமிழர்களுக்கான நலத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் பற்றிய புகைப்ப டங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த கண்காட்சியை தென்கோடிப்பாக் கம் ஊராட்சியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Tags:    

Similar News