ஏற்காட்டில் பைக்கில் இருந்து தவறி விழுந்த புகைப்படக்காரர் பலி

ஏற்காட்டில் பைக்கில் இருந்து தவறி விழுந்த புகைப்படக்காரர் பலியானர்.;

Update: 2024-05-26 09:20 GMT

கோப்பு படம் 

சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 51). புகைப்படக்கலைஞரான இவர் அதே பகுதியில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வந்தார். சங்கர் நேற்று முன்தினம் தனது மனைவி மற்றும் மகளுடன் ஏற்காடு கோடை விழாவுக்கு சென்றார். பின்னர் அவர்கள் அங்கு பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர்.

தொடர்ந்து அவர்கள் சேர்வராயன் மலை கோவிலுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். சேர்வராயன் கோவில் இறக்கத்தில் வந்த போது எதிரே வந்த கார் மீது மோதாமல் இருக்க மோட்டார் சைக்கிளை சங்கர் திருப்பினார்.

Advertisement

அப்போது எதிர்பாராதவிதமாக நிலைத்தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து சங்கர் உள்பட 3 பேரும் கீழே விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்த சங்கரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஏற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

 ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். சங்கரின் மனைவி மற்றும் மகள் லேசான காயம் அடைந்தனர். இதுகுறித்து ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News