போலீஸ் தேர்வானவர்களுக்கு உடல் தகுதி தேர்வு
திண்டுக்கல்லில் போலீஸ் தேர்வாளர்களுக்கு இன்று சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் முதற்கட்ட உடற்தகுதி தேர்வு நடந்தது;
Update: 2024-02-07 07:08 GMT
தகுதி தேர்வு
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 2023-ஆம் ஆண்டிற்கான 2-ம் நிலைக் காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்புத்துறை காவலர் பணிக்கு எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள். தேர்வாளர்களுக்கு இன்று திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் முதற்கட்ட உடற்தகுதி தேர்வு நடந்தது.
இன்று திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.அபிநவ்குமார், மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 918 ஆண் விண்ணப்பதாரர்களுக்கான உடற்தகுதி தேர்வு முதல் நாளான இன்று 373 ஆண் விண்ணப்பதாரர்களுக்கு நடைபெற்றது. இதில் மார்பளவு உயரம் மற்றும் உடற் தகுதிகள் ஆராயப்பட்டன.