பர்வத மலையில் குவிந்த பக்தர்கள்!
பர்வத மலையில் சுவாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.;
Update: 2024-06-24 01:24 GMT
பர்வத மலை
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவ மங்கலத்தில் 4,560 அடி உயரமுள்ள பர்வதமலையில் வீற்றிருக்கும் பிரம்மராம்பிகை அம்மன் மல்லிகா அர்ஜுனேஸ்வரரை தரிசிக்க நேற்று சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். புத்திர பாக்கியம் உண்டாகும், செல்வம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் நேற்று வழக்கத்தை விட பக்தர்கள் அதிக அளவில் மலையேறி வழிபட சென்றனர்.