பைப் லைன் உடைந்து சேதம் வீணாகும் குடிநீர்
மொண்டுகுளி பைர்நாயக்கன்பட்டி காட்டு வளைவு சாலையில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் செல்லும் பைப் லைன் உடைந்ததால் குடிநீர் விணாகியது.
Update: 2024-06-03 08:04 GMT
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மொண்டுகுளி- பையர்நாயக்கன்பட்டி காட்டு வளவு சாலையில் ஒகேனக்கல் தண்ணீர் செல்லும் பைப்லைன் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் குடிநீர் ஆறு போல சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இன்று காலை அந்த வழியாக சென்ற மக்கள் நிர்வாகத்தினருக்கு தகவல் அளித்துள்ளனர்.இது போன்று பல்வேறு பகுதிகளில் அடிக்கடி குடிநீர் வீணாகி வருகிறது. எனவே பைப் லைன் உடைந்து குடிநீர் வீணாகாமல் தடுக்க துறை சார்ந்த ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.