மண்ணச்சநல்லூர், சமயபுரத்தை இணைத்து மாநகராட்சியாக உருவாக்க திட்டம்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையத்தில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு இன்று காலை பிரச்சாரத்தை தொடங்கி தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.;

Update: 2024-03-29 10:13 GMT

திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையத்தில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு இன்று காலை பிரச்சாரத்தை தொடங்கி தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு ஆதரவாக அமைச்சர் கேன்.என்.நேரு வாக்கு சேகரித்து பேசுகையில், 

மண்ணச்சநல்லூர், சமயபுரத்தை இணைத்து மாநகராட்சியாக உருவாக்க உள்ளோம். மாநகராட்சியாக உருவெடுக்கும் போது தொழில் வளர்ச்சி அடைந்து வேலைவாய்ப்பை உருவாக்கி தருவோம் என பேசினார். இந்தியா கூட்டணியின் திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் சார்பில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண்நேரு திமுக வேட்பாளராக போட்டியிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூனாம்பாளையம் கிராமத்தில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு வாக்கு சேகரித்து பேசியதாவது மண்ணச்சநல்லூர், சமயபுரத்தை இணைத்து மாநகராட்சியாக உருவாக்க உள்ளோம். மாநகராட்சியாக உருவெடுக்கும் போது தொழில் வளர்ச்சி அடைந்து வேலைவாய்ப்பை உருவாக்கி தருவோம் என பேசினார்.

இதனைத் தொடர்ந்து மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ கதிரவன் பேசுகையில் அருண் நேருவை அமைச்சர் கே.என். நேரு தேர்தலில் நிற்பது போல் நினைத்து வாக்களிக்க வேண்டும். இவர் வெற்றி பெற்றால் தான் நமது தொகுதிக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை அமைச்சரிடம் கேட்டுப் பெறலாம் என பேசினார்.

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் முசிறி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன், மதிமுக மாவட்டச் செயலாளர் டி டி சி, சேரன் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கலை மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News