சேலம் : மாவட்ட திட்டகுழு கூட்டம் - உறுப்பினர்கள் கோரிக்கை
அடுத்த திட்ட குழு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்;
Update: 2023-12-23 12:45 GMT
சேலம் திட்டக்குழு கூட்டம் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது
சேலம் மாவட்ட திட்டக்குழு கூட்டம் நேற்று மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. திட்டக்குழு தலைவர் ரேவதி ராஜசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் சேகர் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு பேசினர். அப்போது 3-வது திட்டக்குழு கூட்டம் நடக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொள்ள வில்லை. தற்போது திட்டக்குழு சார்பில் மாவட்டத்தில் என்னென்ன பணிகள் நடக்கிறது என்று தலைவர் உள்பட உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியாது. எனவே அடுத்த திட்டக்குழு கூட்டத்தில் கலெக்டர் கலந்து கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர்.